Published : 04 Oct 2017 12:11 PM
Last Updated : 04 Oct 2017 12:11 PM
பனாரஸ் இந்து பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்ட வன்முறைக்குப் பிறகு அங்கு இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் அங்கு படிக்கும் மாணவிகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக பெண்கள் விடுதியின் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. அதாவது இரவில் விடுதி மூடப்படும் நேரம் 8 மணியில் இருந்து 9.30 மணியாக உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்பாராத சூழ்நிலைகளின் போது இந்த நேரம் மேலும் அரை மணி நேரத்துக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
‘ஒருமித்த நிலை எட்டப்பட்டது’
இதுகுறித்துப் பேசிய மேலாண்மை வார்டன் மற்றும் டீன் கூறும்போது, ''நேர விதிகளை மாற்றுவது குறித்த விவாதத்தில் அனைவரிடமும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது'' என்றார்.
இதைத் தொடர்ந்து விடுமுறைகளை அடுத்து செவ்வாய்க்கிழமை அன்று வகுப்புகள் தொடங்கப்பட்டன.
என்ன நடந்தது?
கடந்த செப்டம்பர் மாதத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் பாலியல் சீண்டலுக்கு உள்ளாகியதில் அந்த மாணவி மயங்கி விழுந்தார். இதனைக் கண்டித்து மாணவிகள் தர்ணாவில் ஈடுபட்டவந்தனர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் மீது தடியடி நடத்தப்பட்டது.
இதில் மாணவி ஒருவருக்கு தலையிலும் காலிலும் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் சில மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் வன்முறை வெடித்தது.
80% மாணவர்கள் வருகை
இந்து பனாரஸ் பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை அன்று 80 சதவீத மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெண்களுக்கு எதிராக ஈவ் - டீசிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக விரைவு எதிர்வினைக் குழுவும் பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT