Published : 12 Oct 2017 04:57 PM
Last Updated : 12 Oct 2017 04:57 PM

இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நவம்பர் 9-ம் தேதி நடைபெறும்: தேர்தல் ஆணையர் அறிவிப்பு

நவம்பர் மாதம் 9-ம் தேதி இமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் ஒரே கட்டமாக நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18,2017-ல் நடைபெறும் என்றும் அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி, தேர்தல் ஆணையர்கள் ஓம்பிரகாஷ் ராவத் மற்றும் சுனில் அரோரா ஆகியோருடன் சேர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டனர்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் வாக்களிக்கப் பயன்படுத்தப்படும் என்றும் வாக்காளர்கள் தாங்கள் எந்த வேட்பாளருக்கு அல்லது சின்னத்துக்கு வாக்களித்தனர் என்பதைக் காட்டும் காகித அடையாளம் கூடுதல் வசதியாகும்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் அறிவிக்கப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு பிற்பாடு வெளியிடப்படும் என்றார் தலைமைத் தேர்தல் ஆணையர்.

இமாச்சலில் மொத்தம் 7,521 வாக்குச்சாவடிகளில் 20,000 புதிய வாக்காளர்களுடன் மொத்தம் 49,05 லட்சம் வாக்காளர்கள் நவம்பர் 9-ம் தேதி வாக்களிக்கவுள்ளனர். இந்த முறை பெண்கள் மட்டுமே நிர்வகிக்கும் 136 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்படும் என்றார் அச்சல்குமார் ஜோதி.

வேட்பாளர் ஒருவர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை செலவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

68 உறுப்பினர்கள் கொண்ட இமாச்சல மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் ஜனவரி 7, 2018-ல் முடிவுக்கு வருகிறது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x