Published : 20 May 2023 04:53 AM
Last Updated : 20 May 2023 04:53 AM

கோடை வெப்பத்தில் மயக்கமடைந்து கால்வாயில் விழுந்த நபரை காப்பாற்றிய கான்ஸ்டபிள்

பத்ராசலம்: தெலங்கானாவில் கோடை வெப்பத்தில் மயக்கமடைந்து கால்வாயில் விழுந்த நபரை போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காப்பாற்றினார். இந்த வீடியோ ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் வைரல் ஆகி வருகிறது.

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. காலை 9 மணி முதலே வெயிலின் வெப்பம் தொடங்கி மாலை 6 மணி வரை அதன் அனல் இருக்கிறது. அனல் காற்றும் வீசுவதால் மதிய நேரத்தில் மக்கள் வெளியே தலைகாட்ட அஞ்சுகின்றனர்.

இந்நிலையில் நேற்று தெலங்கானா மாநிலம், பத்ராசலத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதில் பஸ்நிலையம் எதிரில் சுமார் 60 வயது நபர் ஒருவர் திடீரென மயக்கமடைந்து அருகில் இருந்த கால்வாயில் விழுந்தார். இதனை கவனித்த பிரசாத் எனும் போலீஸ் கான்ஸ் டபிள், ஓடிச்சென்று, கால்வாயில் விழுந்தவரை கைதூக்கி எழுப்பி, அவரை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்து, அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து உதவினார். இதனால் மயக்கமடைந்தவர் மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார்.

அங்கு கூடியிருந்த மக்கள் இதனைக் கண்டு, கான்ஸ்டபிள் பிரசாத்தின் மனிதாபிமான செயலை மிகவும் பாராட்டினர்.

இந்த வீடியோ ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தற் போது வைரல் ஆகி வருகிறது. கான்ஸ்டபிள் பிரசாத்தை சமூக வலைதளங்களில் பலர் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x