Published : 18 May 2023 09:47 AM
Last Updated : 18 May 2023 09:47 AM
பெங்களூரு: கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது குறித்து ஆலோசிப்பதற்காக காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் (சிஎல்பி) கூட்டம் இன்று (மே 18) நடைபெறுகிறது.
கர்நாடக முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவகுமாரும் அறிவிக்கப்படலாம் என்று செய்திகள் வெளியான நிலையில் இன்று காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் (சிஎல்பி) கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டத்திற்குப் பின்னர் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும், புதிய அமைச்சரவை வரும் 18-ம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில், தேர்தலில் வென்ற காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில தலைவர் டி.கே.சிவகுமார், முன்னாள் துணை முதல்வர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர் எம்.பி.பாட்டீல் ஆகியோர் முதல்வர் பதவியை கைப்பற்றும் முயற்சியில் இறங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT