Published : 16 May 2023 07:16 AM
Last Updated : 16 May 2023 07:16 AM

டெல்லி - கொல்கத்தா பயண நேரம் 17 மணியாக குறையும்

பிரதிநிதித்துவப் படம்

வாரணாசி: வாரணாசி - கொல்கத்தா இடையே 610 கி.மீ. தூரத்துக்கு பசுமை விரைவுச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ரூ.3 ஆயிரம் கோடி செலவில் அமைக்கப்பட உள்ள இந்த விரைவுச் சாலை பணிகள் 2026-ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வாரணாசி - கொல்கத்தா இடையிலான பயணம் பெரும்பாலும் என்.எச்.19 வழியாக நடைபெறுகிறது.

இதன் பயண நேரம் 12 முதல் 14 மணி நேரம் ஆக உள்ளது. புதிய விரைவுச் சாலை பயன்பாட்டுக்கு வந்தால் இந்த நேரம் 6 முதல் 7 மணி நேரமாகக் குறையும். இதுபோல இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்தால் டெல்லி - கொல்கத்தா இடையிலான பயண நேரமும் 17 மணி நேரமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x