Published : 13 May 2023 10:02 AM
Last Updated : 13 May 2023 10:02 AM

Karnataka Election Results | முன்னிலை வகிக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூரு வர கட்சித் தலைமை உத்தரவு?

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ள வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் மாநிலம் முழுவதும் உள்ள 36 மையங்களில் எண்ணப்பட்டு வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எண்ணப்பட்டு வருகின்றன.

காலை 10 மணி நிலவரம்: காலை 10 மணி நிலவரப்படி காங்கிரஸ் 116 தொகுதிகளிலும், பாஜக 76 தொகுதிகளிலும் ஜனதா தளம் கட்சி 27 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவர்கள் 5 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறார்கள். தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியபடியே, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருவதை அடுத்து கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியினர் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் தலைமை உத்தரவு?: இந்த நிலையில் கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றுள்ள வேட்பாளர்கள் உடனடியாக பெங்களூருவுக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இல்லாத கட்சித் தலைவர்களை அழைத்து வர ஹெலிகாப்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குதிரை பேரத்தை முன்கூட்டியே தடுக்கும் நோக்கில் வேட்பாளர்களை காங்கிரஸ் தலைமை பெங்களூருவுக்கு அழைத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x