Published : 11 May 2023 06:58 AM
Last Updated : 11 May 2023 06:58 AM
புதுடெல்லி: அதானி - ஹிண்டன்பர்க் விவகாரம் தொடர்பான மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் நரசிம்மா, பரிதிவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு இம்மனுக்களை விசாரிக்க உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம், அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது. இதைத் தொடர்ந்து அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதானி குழுமத்துக்கு ரூ.11 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. அதானி நிறுவனங்களில் முதலீடு செய்திருந்த மக்கள் பாதிப்பை எதிர்கொண்டனர்.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்றும், பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு பாதுகாப்பான கட்டமைப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என்றும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் (செபி) விதிமுறைகள் குறித்தும்,பங்குச்சந்தை கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சப்ரே தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அக்குழு தன்னுடைய அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதே சமயம், விசாரணை நடத்த கூடுதல் அவகாசம் கோரி செபி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...