Published : 10 May 2023 07:15 PM
Last Updated : 10 May 2023 07:15 PM

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் 2023 நிறைவு: வெளியானது கருத்துக் கணிப்பு முடிவுகள்- ஆட்சி அமைக்கப்போவது யார்?

கர்நாடக சட்டமன்றம்

பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சிகள் சில தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி பல்வேறு கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ் சராசரியாக 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும், பாஜக 100-க்கும் குறைவான இடங்களிலும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

224 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பெரும்பாலானவை எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறும் என்று குறிப்பிடவில்லை. இருப்பினும் பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் காங்கிரஸுக்கு சற்று கூடுதல் இடம் கிடைக்கும் என்றே குறிப்பிட்டுள்ளன.

மாலை 5 மணி நிலவரப்படி 65.69% வாக்குப்பதிவாகியுள்ள நிலையில் மொத்த வாக்குப்பதிவு விவரம் இன்னும் வெளியாகவில்லை.

டிவி 9 கருத்துக்கணிப்பு:

பாஜக: 88 - 98

காங்கிரஸ்: 99 - 109

மஜத: 21 - 26

ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பு:

பாஜக: 85- 100

காங்கிரஸ்: 94 - 108

மஜத: 24 - 32

பிற கட்சிகள்: 2. 6

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு:

பாஜக: 114

காங்கிரஸ்: 86

மஜத: 21

பிற கட்சிகள்: 3

ஜி மேட்ரிக்ஸ் கருத்துக்கணிப்பு:

காங்கிரஸ்: 103 -118

பாஜக: 79 - 94

மஜத: 25 - 33

பிற கட்சிகள்: 21

ஏபிபி நியூஸ் சி வோட்டர்

பாஜக: 66-86

காங்கிரஸ்: 81-101

மஜத: 20-27

பிற கட்சிகள்: 0-3

நியூஸ் நேஷன்

பாஜக: 114

காங்கிரஸ்: 86

மஜத: 21

பிற கட்சிகள்: 3

சுவர்ண நியூஸ் - ஜன் கி பாத்

பாஜக: 94-117

காங்கிரஸ்: 91-106

மஜத: 14-24

பிற கட்சிகள்: 0-2

கருத்துக் கணிப்பு முடிவுகள் இவ்வாறாக இருக்கும் சூழலில் வெற்றி யாருக்கு என்பது வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13 ஆம் தேதி 1 மணி அளவிலேயே உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x