Published : 05 Sep 2017 08:53 AM
Last Updated : 05 Sep 2017 08:53 AM
தெலங்கானாவில் நிலப்பட்டா வழங்க வருவாய் அதிகாரி ரூ.20,000 லஞ்சம் கேட்டதால், 2 விவசாயிகள் தீக்குளித்தனர். இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை விவசாயிகளான ஸ்ரீநிவாஸ் (25), பரசுராமுலு (23) ஆகிய இருவரும் தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் இலவச நிலப்பட்டா பெற வேண்டி நேற்று முன்தினம், கிராம வருவாய் அதிகாரியிடம் சென்றனர். அவர் பட்டா வழங்க ரூ.20,000 லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த இவர்கள், உள்ளூரில் உள்ள ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.வைப் பார்த்து புகார் கூறுவதற்காக சுமார் 5.30 மணி நேரம் காத்திருந்தனர். ஆனால் யாரும் வராத காரணத்தால் மனம் உடைந்த இருவரும் தாங்கள் கொண்டுவந்த மண்ணெண்ணையை உடல் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளித்தனர். உடனடியாக அங்கிருந்த சக கிராமத்தினர், அவர்களைக் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெலங்கானா மாநில நிதி அமைச்சர் ஈடல ராஜேந்தர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT