Published : 02 May 2023 05:31 AM
Last Updated : 02 May 2023 05:31 AM

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் 3 கோடை சுற்றுலா ரயில்கள்

கோப்புப்படம்

சென்னை: பாரத் கவுரவ் ரயில் திட்டத்தின் கீழ், கோடைக் காலத்தில் 3 சுற்றுலா ரயில்கள் முறையே மே 10,11, 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படவுள்ளன.

பாரத் கவுரவ் ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே 2021-ம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள். இத்திட்டத்தின் கீழ், தெற்கு ரயில்வேயில், 9-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்து ரயில்களை இயக்குகின்றன.

இந்நிலையில், கோடைகால சுற்றுலாவுக்காக 3 ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை டிராவல் டைம்ஸ் நிறுவனம் செய்து வருகிறது.

சென்னையில் இருந்து மே 10-ம் தேதி முதல் ரயில் புறப்படுகிறது. காசி, கயா, பிரயாக்ராஜ், ஹரித்வார், புதுடெல்லி, மதுரா, ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்ப உள்ளது. 10 நாள்களுக்கான கட்டணம் ரூ.22,500 ஆகும்.

சென்னையில் இருந்து மே 11-ம் தேதி இரண்டாவது ரயில் புறப்படுகிறது. ஸ்ரீநகர், குல்மார்க், சோன்மார்க், அமிர்தசரஸ், ஆக்ரா ஆகிய இடங்களுக்கு சென்று திரும்ப உள்ளது. இதுதவிர, சென்னையில் இருந்து மே 22-ம் தேதி 3-வது ரயில் புறப்பட்டு, ஹைதராபாத், அஜந்தா எல்லோரா, ஷீரடி, மும்பை , கோவா உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல உள்ளது.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு www.railtourism.com என்ற இணையதளம் மூலமாகவும், 7305858585 என்ற செல்போன் எண் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x