Published : 08 Sep 2017 11:45 AM
Last Updated : 08 Sep 2017 11:45 AM

2010-ல் ஒருநிலைப்பாடு, 2017-ல் வேறு நிலைப்பாடு: நிதிஷ் குமார் எனும் இருமுகன்

 

பிஹார் வெள்ளத்துக்கு இதே குஜராத் அரசு 2010-ல் வெள்ள நிவாரணத்தொகை அளித்தபோது வேண்டாம் என்று நிராகரித்த பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் 2017-ல் இதே குஜராத் அரசிடமிருந்து வெள்ள நிவாரணத்த் தொகையை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டுள்ளார்.

ஊழலுக்கு எதிராகவும், பாஜக ஆதரவிலும், எதிர்ப்பிலும், ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் சந்தர்ப்பவாதக் கூட்டணியிலும், பிரிவிலும், தனது இரட்டை முகத்தைக் காட்டியவர் நிதிஷ் குமார். ஆனால் வெள்ள நிவாரண நிதியை அப்போது மறுத்ததும் இப்போது ஏற்பதும் ஆச்சரியமான ஒரு முரணாக அமைந்துள்ளது. இருமுறையும் தொகை ஒன்றுதான்: ரூ.5 கோடி.

2010-ல் செய்தித்தாள் விளம்பரம் ஒன்றினால் புண்பட்டுப் போனதாக நிதிஷ் குமார் குஜராத் வெள்ள நிவாரண நிதியை திருப்பி அனுப்பினார். ஆனால் 2017-ல் இதே நிவாரணம் குஜராத் பாஜக அரசின் ‘சமூக நல முயற்சி’ ஆகி விட்டது.

ராஷ்ட்ரிய ஜனதாதளம் உடனே நேரத்தை வீணடிக்காமல் நிதிஷ் குமாரின் ‘கையாலாகத்தனம்’ என்று விமர்சனம் செய்துள்ளது.

சட்டீஸ்கர், ஜார்கண்ட் அரசுகளும் பிஹாருக்கு வெள்ள நிவாரண நிதியாக தலா ரூ.5 கோடி அளித்துள்ளது.

2010-ல் வெள்ள நிவாரண நிதியை அளித்த பிறகு அப்போதைய குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் உயர்த்திய கையுடன் நாளிதழில் விளம்பரம் வெளியானது, இதில் வெகுண்டெழுந்த பிஹார் முதல்வர், “நிவாரணம் அளிக்கும் முறையல்ல இது, சமூக நலத்துக்காக கொடுக்கும் கொடையை நாங்கள் இப்படி விளம்பரம் செய்வதில்லை” என்று சாடினார்.

ஆனால் “அது அந்தக்காலம் நிதிஷ் குமாருக்கும் மோடிக்கு அரசியல் இணைப்பு சாத்தியமில்லாத காலம் இப்போது அப்படியா?” என்று ஆர்ஜேடி நக்கலாகக் குறிப்பிட்டுள்ளது.

ஆர்ஜேடி-யின் தேசிய துணைத்தலைவரும் செய்தித் தொடர்பாளருமான சிவானந்த் திவாரி கூறும்போது, ‘நரேந்திர மோடி எதையும் மறப்பவருமல்ல மன்னிப்பவருமல்ல, 2010-ல் நிதிஷ் நடத்தைக்கு மோடி தற்போது பழிவாங்கிவிட்டார்’ என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x