Published : 29 Apr 2023 08:00 AM
Last Updated : 29 Apr 2023 08:00 AM

வெறுப்பு பேச்சு குறித்து உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

கோப்புப்படம்

புதுடெல்லி: வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜோசப், நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியுள்ளதாவது.

நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதுகாப்பது நமது அனைவரின் கடமையாகும். எனவே, நாட்டில் மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய நபர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது மிக அவசியம். இந்த விவகாரத்தில் புகார் பெறப்படவில்லையென்றாலும் கூட மாநிலங்கள் தாமாக முன் வந்து வழக்குகளை பதிவு செய்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்யாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பாக கருதப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x