Published : 28 Apr 2023 05:35 AM
Last Updated : 28 Apr 2023 05:35 AM
போபால்: மத்திய பிரதேசத்தில் உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசுப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. வியாபம் ஊழல் என்று அழைக்கப்படும் இந்த முறைகேடு கடந்த 2013-ல் ம.பி.யை உலுக்கியது.
ம.பி. மாநில பாஜகவின் தற்போதைய தலைவரான வி.டி.சர்மாவுக்கு இதில் தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் குற்றம் சாட்டியிருந்தார். அவருக்கு எதிராக வி.டி.சர்மா கடந்த 2014-ல்அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் திக்விஜய் சிங் மீது போபால் சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து வழக்கை ஜூலை 1-ம் தேதிக்கு, நீதிபதி விதான் மகேஸ்வரி ஒத்தி வைத்தார். அவதூறு வழக்கில் ராகுல்எம்.பி பதவி பறிபோன நிலையில் எம்.பி திக்விஜய் சிங் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT