Published : 27 Sep 2017 10:03 AM
Last Updated : 27 Sep 2017 10:03 AM

விதவிதமான பழ அலங்காரத்தில் ஏழுமலையானுக்கு சிறப்பு திருமஞ்சனம்

அலங்கார பிரியரான ஏழுமலையானுக்கு விதவிதமான பழ அலங்காரத்தில் திருமலையில் சிறப்பு திருமஞ்சனம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகள் பக்தர்களை மிகவும் கவர்ந்தன.

உற்சவ மூர்த்தியான மலையப்ப சுவாமிக்கு பிரம்மோற்சவ விழாவையொட்டி விதவிதமான அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் வாகன சேவையின்போது பல வித நகைகள், மலர்களால் அலங்காரம் செய்யபடுகிறது. பிரம்மோற்சவ நாட்களில் தினமும் திருமலையில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் சிறப்பு திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவற்றைக் காண பக்தர்கள் சிறப்பு கட்டணம் செலுத்தி கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்ச்சியில் சுவாமிக்கு பல வகையான பழங்கள், உலர்ந்த பழ வகைகள், முத்து, பவளம் போன்றவற்றால் கிரீடம், மாலைகள் போன்றவற்றால் அலங்காரம் செய்யப்படுகிறது.

தங்கம், வைரம், வைடூரியம், முத்து, பவளம், மரகதம் போன்ற விலையுயர்ந்த பொருட்களால் மட்டுமின்றி, இந்த அலங்கார பிரியருக்கு விதவிதமான மலர்களாலும், பழ வகைகளாலும் அலங்கரிக்கப்படுவதை கண்டு பக்தர்கள் மனமுருக வழிபடுகின்றனர். நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு திருமஞ்சனத்திற்கு திருப்பூரை சேர்ந்த ராஜேந்திரா எனும் பக்தர் பழ வகைகளை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x