Published : 25 Apr 2023 02:32 PM
Last Updated : 25 Apr 2023 02:32 PM

‘மக்கள் தொகையில் சீனாவை முந்தும் இந்தியா’ - ஜெர்மனி பத்திரிகை கார்ட்டூனால் கொதிப்படைந்த இந்தியர்கள்

ஜெர்மனி பத்திரிகை வெளியிட்டுள்ள கார்ட்டூன்

சென்னை: மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை, இந்தியா இந்த ஆண்டு பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்தது. இதைக் கருப்பொருளாக வைத்து ஜெர்மன் நாட்டின் ’டெர் ஸ்பீகல்’ (Der Spiegel) என்ற வார இதழ் கார்ட்டூன் ஒன்றை வெளியிடப்பட்டது. அது இந்தியர்களை கொதிப்படைய செய்யும் வகையில் உள்ளது.

அந்தக் கார்ட்டூனில் சீனா மற்றும் இந்திய தேச கொடிகளை பிரதிபலிக்கும் ரயில்கள் இரண்டு அதன் தடங்களில் செல்கின்றன. அதில் இந்திய நாட்டின் ரயில், சீன ரயிலை முந்துகிறது. இந்திய ரயிலில் பயணிக்கும் பயணிகள் ரயிலின் மேற்கூரை உட்பட பெரும்பாலான இடங்களில் பயணிப்பது போல இந்தக் கார்ட்டூனில் உள்ளது. அதோடு இதில் சீனாவின் தொழில்நுட்ப ரீதியிலான வளர்ச்சியை சுட்டிக்காட்டும் வகையில் அவர்கள் புல்லட் ரயிலில் பயணிப்பது போல சித்திரம் தீட்டப்பட்டுள்ளது. அதன்மூலம் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன.

“ஜெர்மனி, இது இனவெறியை பரப்பும் வகையில் உள்ளது. இந்தக் கார்ட்டூன் இந்தியாவின் யதார்த்தத்துடன் எந்த வகையிலும் பொருந்தவில்லை. இதன் நோக்கம் இந்தியாவைத் தாழ்த்துவதே” என தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் கஞ்சன் குப்தா தெரிவித்துள்ளார்.

இது இனவெறி ரீதியிலான கருத்தியலாக மட்டுமல்லாது முற்றிலும் தவறாக வழிநடத்தும் வகையில் இருப்பதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர்.

ரயில் கூரை மீது வங்கதேச மக்கள் பயணிப்பதை இந்தியா என ஜெர்மனியர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் என கருதுகிறேன் என இசைக் கலைஞர் மைக்கேல் மகால் தெரிவித்துள்ளார். இந்தியாவில் பெரும்பாலான ரயில் தடங்கள் மின்மயமாக இருக்கும் சூழலில் இந்த கார்ட்டூன் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் அன்ஷுல் சக்சேனா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x