Published : 22 Apr 2023 04:24 AM
Last Updated : 22 Apr 2023 04:24 AM
சென்னை: சிங்கப்பூரின் டெலியோஸ்-2 செயற்கைக் கோள், பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் இன்று (ஏப்.22) விண்ணில் ஏவப்படுகிறது.
சிங்கப்பூருக்குச் சொந்தமானடெலியோஸ்-2 எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் என்எஸ்ஐஎல் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்த செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதல் ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி சி-55 ராக்கெட் மூலம் இன்று (ஏப்.22) மதியம் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. இதனுடன் சேர்த்து லூம்லைட்-4 எனும் சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 25 மணி 30 நிமிட கவுன்ட்டவுன் நேற்று பகல் 12.14 மணிக்கு தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT