Published : 21 Apr 2023 08:46 AM
Last Updated : 21 Apr 2023 08:46 AM

பூஞ்ச் தாக்குதல் | உயிரிழந்த வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

பூஞ்ச்: ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் அடையாளங்களை ராணுவம் அறிவித்துள்ளது.

உயிரிழந்த வீரர்கள் ஹவில்தார் மன்தீப் சிங், லேன்ஸ் நாயக் தெபாசிஷ் பஸ்வால், லேன்ஸ் நாயக் குல்வந்த் சிங், சிப்பாய் ஹர்கிருஷ்ணன் சிங், சிப்பாய் சேவாக் சிங் என்ற அடையாளம் தெரியவந்துள்ளது. இவர்கள் ராணுவத்தின் ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ் படைப் பிரிவின் 16வது கார்ப்பைச் சேர்ந்தவர்களாவர். நக்ரோடாவில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.இந்நிலையில், நேற்று இவர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சையில் உள்ளார். வீரர்களின் மறைவுக்கு ராணுவத்தினர், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இது தொடர்பாக இந்திய ராணுவத்தில் 16வது கார்ப்ஸின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கமான ஒயிட்நைட் கார்ப்ஸில், "உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம். அவர்களின் குடும்பத்தினருடன் நாங்கள் தோளாடு தோளாடு நிற்கிறோம் " என்று தெரிவித்துள்ளது.

— NORTHERN COMMAND - INDIAN ARMY (@NorthernComd_IA) April 21, 2023

நடந்தது என்ன? நடந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய ராணுவத்துக்கு சொந்தமான வாகனம் ராணுவ வீரர்களை ஏற்றிக் கொண்டு ஜம்மு காஷ்மீரின் பிம்பர் காலி பகுதியிலிருந்து பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சன்ஜியாத் நகரை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

அப்போது, நேற்று மாலை 3 மணியளவில் பனிமூட்டம் அதிகமாக இருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டுகளை வீசி திடீரென தாக்குதலில் ஈடுபட்டனர். இதில், ராணுவ வாகனம் முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில், ராஷ்டிரீய ரைபிள் படைப்பிரிவைச் சேர்ந்த 5 வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x