Published : 20 Apr 2023 02:32 PM
Last Updated : 20 Apr 2023 02:32 PM

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி

புதுடெல்லி: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெறும் இந்திய விமானப் படை கமாண்டர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ராஜ்நாத் சிங் செல்லவிருந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதியானது. இதனால் அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது ரத்தானது.

அவரை பரிசோதித்த மருத்துவக் குழுவானது அவர் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தியது. அதனையடுத்து தற்போது அமைச்சர் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவருக்கு லேசான அறிகுறிகளே ஏற்பட்டுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

12,591 பேருக்கு கோவிட் தொற்று:

  • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,591 பேருக்கு கோவிட் தொற்று உறுதியானது. இது முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது 20 சதவீதம் அதிகமாகும்.
  • இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
  • கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோவிட் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை: 12,591
  • தற்போது நாடு முழுவதும் கோவிட் சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை: 65286
  • கடந்த 24 மணி நேரத்தில் டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை: 10,827
  • இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை: 44,857,992 (4.48 கோடி)
  • இதுவரை கோவிட் தொற்றிலிருந்து மீண்டு வந்தோரின் எண்ணிக்கை: 44,261,476
  • கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 29
  • இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை: 5,31,230
  • இதுவரை நாடு முழுவதும் 2,20,66,28,332 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

XBB.1.16: இந்தியாவில் தற்போது XBB.1.16 என்ற ஓமிக்ரான் புதிய திரிபு தான் கோவிட் பாதிப்பு அதிகரிக்கக் காரணமாக உள்ளது. XBB வைரஸ் என்பது ஒமிக்ரானின் பிறழ்வு வைரஸ்களில் இருந்து உருமாறிய வைரஸாகும். அதாவது பிஏ.2.10.1, பிஏ.2.75, எக்ஸ்பிஎப், பிஏ.5.2.3மற்றும் பிஏ.2.75.3 வைரஸ்களின் மறுவடிவமாகும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x