2 நாள் பயணமாக 24-ல் கேரளா வருகிறார் பிரதமர் மோடி!

பிரதமர் மோடி | கோப்புப்படம்
பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: 2 நாள் சுற்றுப்பயணமாக வரும் 24-ம் தேதி கேரள மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தரவுள்ளார்.

கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்துக்கு 24-ம் தேதி வருகை தரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் மிகப்பெரிய வரவேற்பை அளிக்க மாநில பாஜக முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 25-ம் தேதி கேரளாவில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்களில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி கொச்சியில் 24-ம் தேதி மாபெரும் பேரணியை நடத்த பாஜக முடிவு செய்துள்ளது. ஆனால் இதில், பிரதமர் மோடி பங்கேற்பாரா என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் பேரணியில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in