Published : 19 Apr 2023 05:11 AM
Last Updated : 19 Apr 2023 05:11 AM

பிஹாரில் மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரியை தாக்கிய வழக்கில் 44 பேர் கைது

அம்யா குமாரி

பாட்னா: பிஹாரில் மணல் கடத்தலை தடுக்க சென்ற அதிகாரியை, ஒரு கும்பல் சரமாரியாக கல்வீசி தாக்கி இழுத்துச் சென்றது.

பிஹார் தலைநகர் பாட்னாவில் மணல் கடத்தல் அதிகளவில் நடப்பதாக மாவட்ட கனிமவளத் துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கனிமவளத் துறையின் பெண் அதிகாரி அம்யாகுமாரி இரண்டு ஆய்வாளர்களு டன் மணல் குவாரி பகுதிக்கு சென்றார். இவர்களை கண்டதும் அங்கிருந்து மணல் லாரிகள் சில புறப்பட்டு சென்றன.

மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல்கனிமவளத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்து கல்வீச்சு தாக்குதல் நடத்தியது. அப்போது ஒருவர்கீழே விழுந்து கிடந்த அம்யா குமாரியின் கைப்பிடித்து தரதரவென இழுத்துச் செல்கிறார். மற்றவர்கள் அந்த பெண் அதிகாரியைதிட்டியபடியே அவர் மீது சரமாரியாக கற்களை வீசி தாக்குகின்றனர். உடன் சென்ற 2 ஆய்வாளர்களும் கல்வீச்சில் படுகாயம் அடைந்தனர். இந்த வீடியோ வைரலாக பரவியது.

இதையடுத்து பாட்னா எஸ்.பி ராஜேஷ் குமார் தலைமையிலான போலீஸார் மணல் குவாரி பகுதி யில் சோதனை நடத்தி 44 பேரை கைது செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x