Published : 17 Apr 2023 08:25 AM
Last Updated : 17 Apr 2023 08:25 AM
லக்னோ: அத்தீக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து பகுஜன் சமாஜ் தலைவரும் முன்னாள் முதல்வருமான மாயாவதி ட்விட்டரில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:
போலீஸ் காவலில் இருக் கும்போது அத்தீக் அகமது, அவரது தம்பி அஷ்ரப் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர். இதுவும் உமேஷ் பால் கொலை வழக்கு போன்று மிகக் கொடூர மான குற்றமாகும்.
இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலையை கேள்விக்குறியாக்கி வருகிறது. மாநில அரசின் செயல் பாடு கேள்விக்கு உரியதாக இருக்கிறது. இப்போது உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெறுவதாக தெரிய வில்லை. உத்தர பிரதேச மாநிலம் ‘என்கவுன்ட்டர் பிரதேச’ மாநிலமாக மாறி வருகிறது. இதுகுறித்து அனைவரும் சிந் திக்க வேண்டியது அவசியம். இவ்வாறு மாயாவதி தெரி வித்துள்ளார்.
மம்தா பானர்ஜி விமர்சனம்: இதனிடையே, “உத்தரப் பிரதேச மாநிலத்தில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் இருக்கும்போதே நடந்துள்ள துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒரு வெட்கக்கேடான செயலாகும். நான் இந்தச் செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். உத்தரப் பிரதேசத்தில் ஒட்டு மொத்தமாக சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது” என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT