Published : 13 Apr 2023 05:54 AM
Last Updated : 13 Apr 2023 05:54 AM
புதுடெல்லி: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த குன்டால் சவுத்ரி உடல்நலக்குறைவு காரணமாக கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மெடிக்கல் கேர் மருத்துவமனையில் கடந்த
2008 ஜூன் 18-ம் தேதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு புற்றுநோய் பாதிப்புக்காக மருத்துவர்கள் ராஜேஷ் ஜிண்டால் மற்றும் சனய் பட்வாரி ஆகியோர் கீமோதெரபி சிகிச்சை அளித்தனர்.
அப்போது மருந்தை தவறாக செலுத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் சவுத்ரியின் உடல்நிலை மோசமடைந்தது. உடனடியாக மும்பை டாடா நினைவு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். ஆனால் உயிர் பிழைப்பதற்கு குறைந்த அளவே வாய்ப்பு இருப்பதாக அங்கிருந்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் கொல்கத்தாவில் உள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து சவுத்ரியின் மனைவி தேசிய நுகர்வோர் குறை தீர் ஆணையத்தில் (என்சிடிஆர்சி) மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த என்சிடி ஆர்சியின் தலைமை உறுப்பினர் டாக்டர் எஸ்எம் கந்திகர் சமாபத்தில் பிறப்பித்த உத்தரவில், “மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாக குன்டால் சவுத்ரி உயிரிழந்துள்ளார். எனவே, அவரது குடும்பத்தினருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.30 லட்சம், சிகிச்சை அளித்த மருத்துவர்கள் இருவரும் தலா ரூ.15 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவாக மனுதாரருக்கு மருத்துவமனை நிர்வாகம் ரூ.2 லட்சம் வழங்க வேண்டும்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT