Published : 14 Sep 2017 10:34 AM
Last Updated : 14 Sep 2017 10:34 AM

தண்ணீர் பிரச்சினைக்கு நதிகளுக்கு உயிரூட்டுவதே தீர்வு: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கருத்து

நம் நாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கு நதிகளுக்கு புத்துயிரூட்டுவதே நிரந்தரத் தீர்வாக அமை யும் என்று ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு கூறினார்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் ஈஷா அமைப்பு சார்பில் ‘ராலி ஃபார் ரிவர்ஸ்’ என்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று பேசும்போது, “நதிகளை பேணிக் காப் பது நமது கடமை. முதலில் இவற்றை இணைப்பதை விட, இருக்கும் நதிகள் அழிந்து விடாமல் காப்பதும் அவற்றுக்கு புத்துயிரூட்டுவதும் அவசியம். இது நம் நாட்டின் தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.

ஆந்திர மாநிலம், ராயலசீமா பகுதியில் 19 நதிகளும், கடலோர ஆந்திராவில் 20 நதிகளும் உள்ளன. இவற்றை சிறப்பாக பராமரித்தாலே தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படும். இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம். மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர, ஆயிரக்கணக்கான ஏரிகளையும், நீர்நிலைகளையும் காப்பது அவசியம். நிலத்தடி நீர்மட்டம் குறைந்தபட்சம் 8 மீட்டர் ஆழம் வரை இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ஈஷா அமைப்பின் தலைவர் ஜக்கி வாசுதேவ், ஆந்திர மாநில அமைச்சர்கள் காமிநேனி ஸ்ரீநிவாஸ், தேவிநேனி உமா மற்றும் திரளான மாணவ- மாணவியர், பொதுமக்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x