Published : 09 Apr 2023 04:40 AM
Last Updated : 09 Apr 2023 04:40 AM

2022-23 நிதி ஆண்டில் மூத்த குடிமக்கள் ரூ.1.13 லட்சம் கோடி வரி செலுத்தல்

புதுடெல்லி: மூத்த குடிமக்கள் 2022-23 நிதி ஆண்டில் ரூ.1.13 லட்சம் கோடி வருமான வரி செலுத்தியுள்ளனர். இது இது கரோனாவுக்கு முந்தைய அளவை விட 61 சதவீதம் அதிகம் ஆகும்.

2022-23 நிதி ஆண்டில் தனிநபர் வருமான வரி வசூல் 24 சதவீதமும் நிறுவன வரி வசூல் 17 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2022-23 நிதி ஆண்டில் முதல் 11 மாதங்களில் மட்டும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மூலமாக ரூ.1.13 லட்சம் கோடி வரி வசூலாகியுள்ளது. இது 2021-22 நிதி ஆண்டில் வசூலானதைவிட 35.5 சதவீதம் அதிகம். 2021-22 நிதி ஆண்டில் மூத்த குடிமக்கள் மூலம் ரூ.83,756 கோடி வரி வசூலானது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x