Published : 07 Apr 2023 05:33 AM
Last Updated : 07 Apr 2023 05:33 AM
பெங்களூரு: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் மே 10-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக,எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
மொத்தமாக 224 தொகுதிகளைக் கொண்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் முதல்கட்ட பட்டியலை காங்கிரஸ் கடந்த மாதம் வெளியிட்டது. அதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் ( கனகபுரா), முன்னாள் முதல்வர் சித்தராமையா (வருணா) உள்ளிட்ட 124 பேர் போட்டியிடும் தொகுதிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் 42 வேட்பா ளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று வெளியிட்டது. அதில் கடந்த முறை சித்தராமையா போட்டியிட்ட பாதாமி தொகுதியில் இந்த முறை போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த வாரம் மஜதவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆர்.சீனிவாஸூக்கு குப்பி தொகுதியும், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த முன்னாள் எம்எல்சி பாபுராவ் சின்சிஞ்சூருக்கு குர்மித்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சர்வோதயா கர்நாடகா கட்சிக்கு மேல்கோட்டை தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் விவசாய அமைப்பின் தலைவர் தர்ஷன்புட்டண்ணையா போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் அறிவித்த 124 பேர்கொண்ட முதல்கட்ட வேட்பாளர் பட்டியலில் லிங்காயத் வகுப்பினருக்கு அதிகபட்சமாக 30 தொகுதிகளும், ஒக்கலிகா வகுப்பினருக்கு 21 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டிருந்தது. நேற்று வெளியான 42 பேர் கொண்ட 2வது கட்டவேட்பாளர் பட்டியலில் லிங்காயத்வகுப்பினருக்கும், ஒக்கலிகா வகுப்பினருக்கும் தலா 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பாஜகவின் வாக்கு வங்கி யாக உள்ள லிங்காயத் வகுப்பி னரையும், மஜதவின் வாக்கு வங்கியாக உள்ள ஒக்கலிகா வகுப் பினரையும் கவரும் வகையில் காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT