Published : 31 Mar 2023 08:08 AM
Last Updated : 31 Mar 2023 08:08 AM

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு

‘எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ படக்குழுவினருடன் பிரதமர் மோடி

புதுடெல்லி

ஆஸ்கர் விருது வென்ற ‘எலிஃபன்ட்விஸ்பரர்ஸ்’ படக் குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினர். அப்போது அவர்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.

தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ் என்ற ஆவண குறும்படத்தை கார்த்திகி கான்சால்வ்ஸ் இயக்கி இருந்தார். தமிழ்நாடு வனப்பகுதியில் தாயை இழந்த யானைக்குட்டிக்கும் அதைவளர்த்தவர்களுக்கும் இடையிலான பந்தத்தை விளக்குவதாக இந்தப் படம் அமைந்தது. குனீத் மோங்கா தயாரித்த இந்தப் படம் ஆஸ்கர் விருதை வென்றது. இந்தியாவில் தயாரான ஆவண குறும்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைத்தது இதுதான் முதல் முறை.

இந்நிலையில், கான்சால்வ்ஸ் மற்றும் மோங்கா உள்ளிட்ட இந்தப் படக்குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்துப் பேசினர். அப்போது பிரதமர் மோடி அவர்களை வெகுவாக பாராட்டினார்.

இந்த படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “திஎலிஃபன்ட் விஸ்பரர்ஸ் சர்வதேச அளவில் கவனத்தையும் பாராட்டையும் பெற்றது. அந்தப் படத்தில் பணியாற்றிய திறமையான குழுவினரை சந்திக்கும் வாய்ப்பு இன்றுஎனக்குக் கிடைத்தது. இந்தியாவுக்கு அவர்கள் பெருமை தேடித் தந்துள்ளார்கள்” என பதிவிட்டுள்ளார்.

ஷியாம்ஜிக்கு மரியாதை

நாட்டின் புரட்சிகரமான சுதந்திர போராட்ட வீரர் ஷியாம்ஜி கிருஷ்ணவர்மாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவருக்கு பிரதமர் மோடி நேற்று மரியாதை செலுத்தினார்.

ட்விட்டரில் அவர் விடுத்த செய்தியில் கூறியிருப்பதாவது:

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின்நினைவு நாளில் அவரை வணங்குகிறேன். நேர்மையான தேசியவாதி மற்றும் துணிச்சல்மிக்கவருமான அவர், அநீதி மற்றும் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முன்னிலைவகித்தார். அவரது கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, நாம் நமது நாட்டின் மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவோம். இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x