Published : 29 Mar 2023 05:16 AM
Last Updated : 29 Mar 2023 05:16 AM
திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி ரூ. 4.31 கோடி அபராதம் விதித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள திருப்பதி ஏழுமலையான் பக்தர்கள் டாலர்களையும், யூரோக்களையும், தினார்களையும் காணிக்கையாக உண்டியலில் செலுத்தி வழிபடுகின்றனர். உண்டியலில் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் விவரங்களை தேவஸ்தானம் அறியமுடிவதில்லை. ஆனால், இப்படி உண்டியலில் செலுத்தப்பட்ட வெளிநாட்டு கரன்சிகளை பாரத ஸ்டேட் வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தங்களது அறக்கட்டளை கணக்கில் வரவு வைக்கிறது.
இதற்காக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தின் (எப்சிஆர்ஏ) கீழ் பதிவு செய்வது அவசியம். பின்னர் ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒரு முறைஅந்த பதிவை புதுப்பிக்க வேண்டும். ஆனால், கரோனா பரவல்காரணமாக திருப்பதி தேவஸ்தானம் பதிவை புதுப்பிக்க தவறிவிட்டது.
ஆதலால், கடந்த 2019-ம் ஆண்டுக்காக ரூ. 1.14 கோடியும், மார்ச்5-ம் தேதி வரை மேலும் ரூ. 3.17கோடி என மொத்தம் ரூ. 4.31 கோடிஅபராதத்தை திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. தேவஸ்தானத்திடம் ரூ.26 கோடி மதிப்பிலான வெளிநாட்டு டாலர்கள் கடந்த 3 ஆண்டு களாக வங்கியில் டெபாசிட் செய்யப்படாமல் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT