Last Updated : 05 Sep, 2017 04:54 PM

 

Published : 05 Sep 2017 04:54 PM
Last Updated : 05 Sep 2017 04:54 PM

உள்ளத்தை உருக்கிய காஷ்மீர் சிறுமியின் அழுகை: மனமிரங்கிய கவுதம் கம்பீர் உதவி

காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதலில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் வீர மரணம் அடைந்தார். இறுதி மரியாதையின்போது அவரது மகள் கண்ணீர் விட்டு கதறியது பலரது மனதை உருக்கியது.

காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்கு தலுக்கு அப்துல் ரஷீத் என்ற உதவி சப்-இன்ஸ்பெக்டர் வீரமரணம் அடைந்தார். கடந்த ட்திங்கள்கிழமை அவரது உடலுக்கு போலீஸார் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். அப்போது அப்போது சிறுமியான அப்துல் ரஷீத்தின் மகள் ஜோரா, தனது தந்தையை இழந்த சோகத்தில் கண்ணீர் விட்டு கதறினாள்.

இது பார்ப்பவர்கள் உள்ளத்தை உருக வைத்தது. சிறுமி அழும் படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பலரது அனுதாபத்தை பெற்றுள்ளது. ’

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“ஜோரா, நான் உன்னை தாலாட்டுப்பாடி உறங்க வைக்க முடியாது, ஆனால் உன் கனவுகளை நீ வாழ நிச்சயம் உதவுவேன். வாழ்நாள் முழுதும் உன் கல்விக்காக நான் உதவி அளித்து ஆதரவளிப்பேன் #daughterofIndia Zohra, உன் கண்களிலிருந்து கண்ணீரை பூமியில் சிந்த விடாதே, பூமித்தாய் கூட அதன் வலியின் சுமையைத் தாங்க மாட்டாள். உயிர்த்தியாகம் செய்த உன் தந்தை அப்துல் ரஷீத்துக்கு என் வீர வணக்கங்கள்”

இவ்வாறு கம்பீர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x