Published : 17 Mar 2023 05:08 AM
Last Updated : 17 Mar 2023 05:08 AM

கேரளா, தமிழகம், லட்சத்தீவுக்கு குடியரசுத் தலைவர் முர்மு 6 நாள் சுற்றுப் பயணம்

கேரள மாநிலத்தின் கொச்சி நகருக்கு நேற்று சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, அங்குள்ள ஐஎன்எஸ் துரோணாச்சார்யா கடற்படை பயிற்சி மையத்துக்கு குடியரசுத் தலைவரின் கொடியை வழங்கினார். அப்போது வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.படம்: பிடிஐ.

கொச்சி: கேரளா, தமிழகம், மற்றும் லட்சத்தீவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 6 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நேற்று மாலை கேரள மாநிலம் கொச்சி நகருக்கு சென்றார். அங்கு அவர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்தை பார்வையிட்டார்.

அதன்பின் கடற்படை பயிற்சிதளம் ஐஎன்எஸ் துரோனாச்சாரியாவுக்கு குடியரசுத் தலைவரின் கொடியை அவர் வழங்கினார். கொல்லத்தில் உள்ள மாதா அமிர்தானந்தமயி மடத்துக்கு அவர் இன்று செல்கிறார். அதன்பின் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் திரவுபதி முர்மு கலந்து கொள்கிறார். கேரள டிஜிட்டல் பல்கலைக்கழகம் மலையாளத்தில் மொழிபெயர்த்துள்ள டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் தொழில்நுட்ப பாடப் புத்தகங்களை அவர் வெளியிடுகிறார்.

கன்னியாகுமரிக்கு நாளைசெல்லும் குடியரசுத் தலைவர், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை பார்வையிட்டு மரியாதை செலுத்துகிறார்.

நாளை மாலை லட்சத்தீவு செல்லும் குடியரசுத் தலைவர் கவராத்தியில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x