Published : 16 Mar 2023 06:54 AM
Last Updated : 16 Mar 2023 06:54 AM
மும்பை: தெற்கு மும்பை பகுதியில் தொழிலதிபர்கள் வீடு வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதால் விலை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறியது: கடந்த மாதம் வெல்ஸ்பன் குழுமத் தலைவர் பி.கே.கோயங் காவுக்கு வோர்லி பகுதி டவர் ‘பி’யில் உள்ள 63,64,65-ஆவது தளங்களை வாங்கினார். இவை 30,000 சதுர அடி பரப்பளவை கொண்டவை. ரூ.240 கோடியில் வாங்கப்பட்ட இந்த ஒப்பந்தம்தான் நாட்டின் அதிகபட்ச மதிப்புடைய குடியிருப்பு மனை விற்பனை ஒப்பந்தமாக கருதப்பட்டது.
இந்த நிலையில் அதனையும் விஞ்சும் வகையில் தெற்கு மும்பையில் ரூ.252 கோடிக்கு மூன்றடுக்கு மாடி குடியிருப்பு விற்பனையாகி உள்ளது. இங்கு ஒரு சதுர அடி விலை ரூ.1.4 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வால்க்ஸ்வரில் 18,000 சதுர அடியில் கட்டப்பட்டு வரும் இந்த குடியிருப்பை வாங்க தொழிலதிபர் நீரஜ் பஜாஜுக்கும், மேக்ரோடெக் டெவலப்பர்ஸுக்கும் (லோதா குழுமம்) இடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்காக ரூ.15 கோடி முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ரியல் எஸ்டேட் வட்டாரங்கள் கூறின.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT