Published : 11 Sep 2017 04:05 PM
Last Updated : 11 Sep 2017 04:05 PM
தெலுங்கானாவில் பள்ளி சீருடை அணிந்து வராத காரணத்துக்காக 5-ம் வகுப்பு சிறுமி ஒருவரை, மாணவர்கள் கழிவறையின் முன் பள்ளி நிர்வாகம் நிற்கவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்திலுள்ள சித்தூர் மாவட்டத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
ராமச்சந்திர மண்டலில் அமைந்துள்ள ராவ் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவர் கடந்த சனிக்கிழமையன்று சீருடை அணிந்து வராத காரணத்திக்காக பள்ளி நிர்வாகம் மாணவர்களின் கழிவறைக்கு முன் நிற்கும்படியான தண்டனைக்கு அந்த மாணவியை உட்படுத்தியுள்ளது.
மாணவியின் சீருடை ஈரமான காரணத்தால் அவரால் சீருடையில் வர முடியவில்லை என்று அவரது பெற்றோர்கள் மாணவியின் பள்ளி குறிப்பேட்டில் எழுதிக் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் இந்த தண்டனையை மாணவிக்கு வழங்கியுள்ளது என்று மாவட்ட கல்வி அதிகாரி விஜய குமாரி தெரிவித்துள்ளார்.
தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவி இந்தச் சம்பவத்தை அவரது பெற்றோர்களிடம் தெரியப்படுத்த, அவர்கள் பள்ளிக்கு சென்று வன்முறையில் இறங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பந்தப்பட்டப்பவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது,
இந்த சம்பவம் குறித்து தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப அமைச்சர் கே.டி. ராம ராவ் தனது ட்விட்டர் பக்கத்தில், கல்வித் துறை அமைச்சர் கடியம் ஸ்ரீஹரியை உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT