Published : 13 Mar 2023 06:21 AM
Last Updated : 13 Mar 2023 06:21 AM

ராகுலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் - பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேச்சு

பிரக்யா தாக்குர்

புதுடெல்லி: இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலுக்கு ஆளும் கட்சி மதிப்பளிப்பதில்லை என்று தெரிவித்திருந்தார். பாஜகவை விமர்சிக்கும் வகை யில் அவர் பல்வேறு கருத்துகளை தெரிவித்திருந்தார். தவிர நாட்டுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் பாஜக எம்பி பிரக்யா தாக்குர் கூறியுள்ளதாவது: வெளிநாட்டுப் பெண்ணுக்கு பிறந்த மகன் ஒருபோதும் தேசபக்தனாக இருக்க முடியாது என்ற சாணக்யாவின் கூற்றை ராகுல் காந்தி நிரூபித்து விட்டார். உங்கள் தாய் இத்தாலியைச் சேர்ந்தவர் என்பதால் நீங்கள் இந்தியராக இருக்க முடியாது.

நாடாளுமன்ற செயல்பாடுகளை முடக்குவது மட்டுமே காங்கிரஸ் வேலையாக உள்ளது. அக்கட்சி ஆட்டம் கண்டு வருகிறது. விரைவில் அது காணாமல் போகும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் (ராகுல் காந்தி) அவர்களை அவமரியாதை செய்யும் வகையில் அந்நிய மண்ணில் பேசியுள்ளீர்கள். இது வெட்கக்கேடானது. அரசியலில் ராகுலுக்குவாய்ப்பளிக்காமல் நாட்டை விட்டேதுரத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் பேச துணிவின்றி ராகுல் வெளிநாடுகளில் சென்று புலம்பி வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x