Published : 10 Mar 2023 05:46 AM
Last Updated : 10 Mar 2023 05:46 AM
மும்பை: பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிரத்யேக டிஜிட்டல் வலைதளமான ‘ஹெர் சர்க்கிள்’ (hercircle.in) 31 கோடி பெண்களை சென்றடைந்துள்ளதாக நீட்டா அம்பானி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் பவுண்டேஷன் நிறுவனரும், தலைவருமான நீட்டா அம்பானி கடந்த 2021-ம் ஆண்டு ஹெர் சர்க்கிள் என்ற டிஜிட்டல் வலைதளத்தை பெண்களுக்காக பிரத்யேகமாக தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து நீட்டா அம்பானி கூறியது: பெண்கள் தொடர்பான உள்ளடக்கங்கள் மற்றும் மேம்பாடு சார்ந்த ஆலோசனைகளை வழங்கும் டிஜிட்டல் தளமாக ஹெர் சர்க்கிள் உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம், கல்வி, தொழில்முனைவு, நிதி, வழிகாட்டுதல், தலைமைத்துவம் போன்றவற்றில் நிபுணர் குழுவின் பதில்களை பெற்று பெண்களுக்காக இந்த வலைதளம் வழங்குகிறது.
பெண்களுக்காக தனிப்பயனாக்கப்பட்ட, பாதுகாப்பான வலைதளமாக ஹெர் சர்க்கிள் உள்ளது. அதன்காரணமாகவே இது ஒவ்வொருவருக்குமான திட்டமாக தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது. பெண்களின் பிரச்சினை, அதற்கான தீர்வுகளை வழங்குவதில் இந்த டிஜிட்டல் வலைதளம் முன்னிலையில் உள்ளது.
அந்த நம்பிக்கையை பிரதிபலிக்கும் விதமாகவே ஹெர் சர்க்கிள் டிஜிட்டல் வலைதளம் தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளில் 31 கோடிக்கும் அதிகமான பெண்களை சென்றடைந்துள்ளதுடன் அவர்களின் மிகுந்த விருப்பத்திற்குரிய நம்பிக்கை பெற்ற தளமாக மாறியுள்ளது.
மேலும், ஹெர் சர்க்கிளில் பதிவுசெய்த 2,20,000க்கும் மேற்பட்ட பெண் பயனர்களில் பெரும்பாலானோர் தொழில்முனைவோர்களாக உள்ளனர். இது, பெண்கள் தொழில்
ரீதியாகவும் சமூக ரீதியாகவும் ஒன்றிணைந்து முன்னேற ஊக்கமளிக்கும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT