Published : 01 Mar 2023 04:44 AM
Last Updated : 01 Mar 2023 04:44 AM
புதுடெல்லி: கடந்த 2009-ம் ஆண்டு மத்திய அரசு, குடிமக்களுக்கு தனித்த அடையாள எண் வழங்கும் நோக்கில் ஆதார் அட்டை திட்டத்தை முன்னெடுத்தது. தற்போது அனைத்து விதமான சேவைகளுக்கும், வாடிக்கையாளர்களின் தகவலை உறுதி செய்ய ஆதார் அட்டை முதன்மையான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில், ஆதாருக்கு என்று அமைக்கப்பட்ட ஆணையமான யுஐடிஏஐ, ஆதார் அட்டை வழியான தகவல் சரிபார்ப்பு சார்ந்து புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆதார் எண் வழியாக மட்டுமில்லாமல், குடிமக்களின் விரல் ரேகை பதிவு வழியாகவும் ஆதார் விவரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இந்நிலையில் விரல் ரேகை சரிபார்ப்பு நடைமுறையின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் மெஷின் லேர்னிங் உதவியுடன் புதிய பரிசோதனை கட்டமைப்பை யுஐடிஏஐ உருவாக்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு வழியாக, போலி ரேகைகள் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஜனவரி நிலவரப்படி, நாட்டில் 135.9 கோடி மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT