Published : 21 Jul 2014 08:42 AM
Last Updated : 21 Jul 2014 08:42 AM
கருணைக் கொலை வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி மருத்துவர் கள் சங்கம் மனு தாக்கல் செய் துள்ளது.
‘மருந்துகளால் குணப்படுத்தி காப்பாற்ற முடியாது என்ற நிலைக்குச் சென்றுவிட்ட நோயாளி களை அவர்களது விருப்பத்தின் பேரில் சட்டப் பூர்வமாக ‘யூதனே ஷியா’ எனப்படும் கருணைக் கொலை செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இம்மனு குறித்து எட்டு வாரங்க ளுக்குள் பதிலளிக்கும்படி அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவ முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் அந்தி அர்ஜூனா நியமிக் கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வலியுறுத்தி இந்திய தீவிர சிகிச்சை மருத்துவ சங்கம் (ஐஎஸ்சிசிஎம்) உச்ச நீதிமன் றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
இச்சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்துள்ள மூத்த வழக்கறி ஞர் சேகர் நாப்தே கூறியதாவது: இனிமேல் குணப்படுத்தவே முடியாது என்ற நிலைக்கு நோயாளி சென்றுவிட்டால், நோயால் ஏற்படும் அவதியும் அதிகமாக இருந்தால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிப்பதில் எந்தப் பலனும் இல்லை என்பதே எங்கள் நிலை. மருத்துவர்களின் ஆலோசனை, நோயாளியின் வயது, நோயின் தன்மை உள்ளிட்டவைகளைப் பொறுத்தும் இது அடங்கும்.
இப்பிரச்சினை பல அம்சங்களை உள்ளடக்கிய சிக்கலான விஷயம். இதை ஒரு வரியில் கொண்டு வந்துவிட முடியாது. கவுரவமாக வாழ ஒரு மனிதனுக்கு எப்படி உரிமை இருக்கிறதோ, அதேபோல எந்த அவதியும் இன்றி கவுரவமாக சாக மனிதனுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து. இவ்வாறு அவர் கூறினார்.
குணப்படுத்த முடியாத வியாதி பற்றி நூல்கள் எழுதியவரும் சங்கத் தின் முன்னாள் தலைவருமான மருத்துவர் ஆர்.கே.மணி கூறியதாவது: கருணைக் கொலை என்பது மருத்துவர்களுக்கும் நோயாளி களுக்கும் இடைப்பட் டது என்பதால் இந்த விவாதத்தில் மருத்துவர்களுக்கும் பங்கு இருக்க வேண்டும். நோயாளி களின் உரிமை பாதிக்கப்படக் கூடாது. ஒரு மனிதன் தான் எப்படி சாக வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமையை நாம் தர மறுக்கிறோம். இந்த முறை நாங்கள் அமைதியாக இருக்க விரும்பவில்லை.
‘யூதனேஷியா (கருணைக் கொலை)’ என்பது நாஜிக்கள் காலத்து சொல். ‘வாழ்க்கையை முடித்துக் கொள்ளுதல்’ என்பது தான் இதற்கான சரியான சொல். இது தொடர்பாக மருத்துவ மாநாடுகளில் பல ஆய்வறிக் கைகள் சமர்ப்பிக்கப்பட் டுள்ளன. இதில் புதிதாக கண்டுபிடிப்பதற்கு ஒன்றும் இல்லை. வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்கு நடை முறைக்கு சாத்தியமான விதிமுறை களை வகுக்க மருத்துவ நிபுணர் கள் வலியுறுத்தி உள்ளனர். அதை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT