Published : 25 Feb 2023 05:40 AM
Last Updated : 25 Feb 2023 05:40 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம், மஞ்சிராலா மாவட்டம்,சென்னூர் கிராமத்தை சேர்ந்த சைலஜாவுக்கும், ஜெயசங்கர் பூபாலபல்லி மாவட்டம், பஸ்வராஜு பல்லியை சேர்ந்ததிருப்பதி என்பவருக்கும் நேற்று திருமணம் நடைபெற இருந்தது.
ஆனால், திருமணத்திற்கு முந்தைய நாள் சிறிய விபத்தில் மணப்பெண்ணின் கால் எலும்பு முறிந்தது. இதனால் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில், மணமகன் திருப்பதி, திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நாளிலேயே மணமகள் கழுத்தில் தாலிகட்ட விரும்பினார். அதற்கு மணமகளும் சம்மதித்தார். இதையடுத்து மருத்துவமனை அனுமதியுடன் இரு வீட்டார் முன்னிலையில், மணமகன் திருப்பதி,படுக்கையில் சிகிச்சை பெற்று வரும் சைலஜாவுக்கு தாலி கட்டினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment