Published : 03 May 2017 08:48 PM
Last Updated : 03 May 2017 08:48 PM
விவசாயிகள் தற்கொலை தொடர்பான வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தொண்டு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்ற னர். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்” என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “வேளாண் விளை பொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்து தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றனர்.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 13-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறும்போது, “கடும் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது மனவேதனை தருகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்” என கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் 28-ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில், “விவசாயி கள் தற்கொலைக்கு வறட்சி காரணம் அல்ல. பல்வேறு சொந்த காரணங்களுக்காக அவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள னர். விவசாயிகள் நலனுக்காக குறைந்தபட்ச ஆதரவு விலை, உழவர் சந்தை உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது” என கூறப்பட்டிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT