Published : 05 Jul 2014 10:02 AM
Last Updated : 05 Jul 2014 10:02 AM
டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் தினேஷ் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் என்று டெல்லியில் உள்ள ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.
டெல்லி ஆசிரியர்கள் சங்க ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க அலுவல கத்தில் நடந்தது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து ஜாமியா ஆசிரியர் சங்க செயலர் எம்.எஸ்.பட் கூறியதாவது:
டெல்லி பல்கலைக்கழக துணைவேந்தர் தினேஷ் சிங் தனது சர்வாதிகார மனப்பான்மையால் ஆசிரியர் சமுதாயத்தின் புகழுக்கே களங்கம் ஏற்படுத்தி விட்டார். இனிமேலும் துணைவேந்தராக நீடிக்கும் தார்மிக உரிமையை அவர் இழந்துவிட்டார். அவர் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்.
நாட்டில் இலவசமாக கல்வி வழங்கும் பொறுப்பில் இருந்து அரசு ஒருபோதும் விலகக் கூடாது.
ஏழ்மையை ஒழித்து சமத்து வத்தை உருவாக்கும் கருவியாக கல்வியைக் கருத வேண்டும். கல்விக்கு ஒதுக்கப்படும் நிதியை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும்.
துணைவேந்தர்கள், இயக்கு நர்கள், முதல்வர்கள் நியமனத் தில் அரசியல், பணம் ஆகியவை குறுக்கிடாதவாறு தடுக்க வேண்டும். பதவி நியமனங்கள், பதவி உயர்வுகள் உரிய காலத்தில் வழங்கப்பட வேண்டும். ஒப்பந்த முறையை ரத்து செய்து லட்சக்கணக்கில் உள்ள காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT