Last Updated : 13 May, 2017 02:51 PM

 

Published : 13 May 2017 02:51 PM
Last Updated : 13 May 2017 02:51 PM

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் (Tral) என்ற இடத்தில் தீவிரவாதிகள் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், பாதுகாப்புப் படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்துள்ளனர்.

அங்கிருந்த குடியிருப்புப் பகுதியை ராணுவப் படையினர் கண்காணித்துக் கொண்டிருந்தபோது, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக ஆரம்ப கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது தீவிரவாதிகள் ராணுவப் படையினர் மீது நடத்திய தாக்குதலா அல்லது அந்த இடத்தை விட்டு வெளியேற மேற்கொண்ட முயற்சியா என்பது இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.

இதுகுறித்து 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், ''ஸ்ரீநகரில் இருந்து சுமார் 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ட்ரால் பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்துள்ளனர். தீவிரவாதிகளைப் பிடிக்க தேடுதல் நடைபெற்று வருகிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x