Last Updated : 12 May, 2017 10:25 AM

 

Published : 12 May 2017 10:25 AM
Last Updated : 12 May 2017 10:25 AM

சுஷ்மா ஸ்வராஜுடன் ரஷ்ய துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோசஜின் சந்திப்பு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்யா துணைப் பிரதமர் டிமிட்ரி ரோகோசஜின் டெல்லியில் நேற்று வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்துப் பேசினார்.

பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, பேரிடர் மேலாண்மை, வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்கெனவே உள்ள இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து சுஷ்மா கூறும்போது, “ரஷ்ய துணைப் பிரதமருடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்தது. ரஷ்யாவுடனான உறவு என்பது இந்தியாவின் வெளியுறவு கொள்கையின் மிக முக்கியமான தூண்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த ஆண்டு கோவாவில் நடந்த ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டின் நடுவே இரு நாடுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தங்களை அமல்படுத்துவதில் சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x