Published : 11 Feb 2023 05:06 PM
Last Updated : 11 Feb 2023 05:06 PM

சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட லாலு டெல்லி திரும்பினார்

புதுடெல்லி: சிங்கப்பூரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் டெல்லி திரும்பினார்.

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்தார். உடல் நலக்குறைவு காரணமாக அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்நிலையில், லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, லாலு பிரசாத் யாதவுக்கு, அவரது மகள் ரோஹினி ஆச்சார்யா சிறுநீரகத்தைத் தானம் செய்ய முன்வந்தார். இதையடுத்து, சிங்கப்பூருக்குக் கொண்டு செல்லப்பட்ட லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த டிசம்பர் 5-ம் தேதி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

எனினும், தொற்று ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், மருத்துவர் கண்காணிப்பை உறுதிப்படுத்திக்கொள்வதற்காகவும் லாலு பிரசாத் யாதவ் தொடர்ந்து சிங்கப்பூரிலேயே இருந்து வந்தார்.

அறுவை சிகிச்சை முடிந்து 2 மாதங்கள் கடந்துவிட்டதை அடுத்து, லாலு பிரசாத் யாதவ் சிங்கப்பூரில் இருந்து டெல்லியில் உள்ள இல்லத்திற்கு வந்தார். அவரோடு, அவருக்கு சிறநீரக தானம் அளித்த ரோஹினி, இளைய மகள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சிங்கப்பூரில் இருந்து டெல்லி திரும்பினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x