Published : 11 Feb 2023 04:52 AM
Last Updated : 11 Feb 2023 04:52 AM
புதுடெல்லி: மக்களவையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. டி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி அளித்த பதில்:
சிறுபான்மையினர் நலனுக் காகவும், அவர்களது பிரச்சினைகளை தீர்க்கவும் தேசிய சிறு பான்மையினர் ஆணையம் செயல்படுகிறது. 2017 முதல் இந்த ஆணையத்துக்கு இதுவரை 10,562 புகார்கள் வந்துள்ளன. 2021-22-ம் ஆண்டில் அதிகபட்சமாக 2,076 புகார்கள் ஆணையத்துக்கு வந்துள்ளன. அதிகபட்சமாக கடந்த 5 ஆண்டுகளில் உ.பி.யில் இருந்து 4,576 புகார்கள் வந்துள்ளன. இவ்வாறு ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT