Published : 03 Feb 2023 06:24 AM
Last Updated : 03 Feb 2023 06:24 AM

மும்பை- ஷீரடி இடையே வந்தே பாரத் ரயில் சேவை 10-ம் தேதி தொடக்கம்

மும்பை: சென்னை பெரம்பூர் ஐசிஎப் ஆலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

டெல்லி-வாரணாசி, டெல்லி - கட்ரா, மும்பை-காந்திநகர், டெல்லி- ஆம்ப் ஆண்ட்ரா, சென்னை- மைசூர், பிலாஸ்பூர்-நாக்பூர், ஹவுரா-புதுஜல்பாய்குரி, விசாகப்பட்டினம்-செகந்திராபாத் ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக மும்பை- ஷீரடி, மும்பை- சோலாப்பூர் வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி 10-ம் தேதி தொடங்கி வைக்கிறார். இதற்காக ஒரு வந்தே பாரத் ரயில் நேற்று மும்பை சென்றடைந்தது. மற்றொரு வந்தே பாரத் ரயில் 6-ம் தேதி மும்பை வந்தடைய உள்ளது.

இதுகுறித்து ரயில் அதிகாரி ஒருவர் கூறும்போது, “வந்தே பாரத் ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். இதன்படி மும்பை-சோலாப்பூர் இடையிலான 455 கி.மீ. தொலைவை வந்தே பாரத் ரயில் 6.35 மணி நேரத்தில் கடக்கும். இதேபோல மும்பை-ஷீரடி இடையிலான 340 கி.மீ. தொலைவை வந்தே பாரத் ரயில் 5.25 மணி நேரத்தில் கடக்கும்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x