Published : 02 Feb 2023 06:25 AM
Last Updated : 02 Feb 2023 06:25 AM
புதுடெல்லி: இந்திய ராணுவம் தற்போது ராணுவ வீரர்கள் பயன்படுத்த ஜெட்பேக்ஸ்கள் வாங்க டெண்டர் வெளியிட்டுள்ளது. இந்த அதிநவீன ஜெட்பேக்ஸ் உடை அணிந்து வானில் மேலெழுந்து சென்று கண்காணிப்பு மற்றும்தாக்குதல் நடத்த முடியும்.
அதேபோல் எந்த இடத்தில் இருந்தும் எந்த திசையில் இருந்தும் ஜெட்பேக்ஸ் உடை அணிந்து திடீரெனமேலெழும்பி கீழிறங்கி வரமுடியும். இந்த உடை அணிந்து மணிக்கு50 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். இதுபோன்ற அதிநவீன48 ஜெட்பேக்ஸ்கள் வீரர்களுக்காக வாங்க ராணுவம் முடிவெடுத் துள்ளது.
அடுத்து, 4 கால்களுடன் விலங்கு போன்ற 130 ரோபோக்களை வாங்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது. இந்த ரோபோ 10 ஆயிரம் அடி உயரத்திலும் சர்வசாதாரணமாக சென்று வரும். மலை, காடு, நீர்நிலை என எந்தப் பகுதியாக இருந்தாலும் விரைந்து சென்று கண்காணிப்பில் ஈடுபடும். அத்துடன் வழியில் தடை ஏற்பட்டால் அதை தானாக கண்டறிந்து வேறு பாதையில் சென்று கண்காணிப்பில் ஈடுபடும். இதுபோன்ற 100 விலங்கு ரோபோக்களை வாங்கவும் ராணுவம் திட்டமிட்டுள்ளது.
தவிர தரைப் பகுதியில் இணைக்கப்பட்ட கருவியுடன் சேர்ந்த 130 ட்ரோன்களை ராணு வம் கொள்முதல் செய்ய உள்ளது. தனித் தனி ட்ரோன்களாக இல்லா மல் பல ட்ரோன்கள் இணைந்து கூட்டமாக சென்று உளவு பார்க்க கூடியவை. பல ட்ரோன்கள் ஒரே நேரத்தில் பறந்தாலும், அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைப்பு பெற்றவை. அவை அனைத்தும் இணைந்து தரைப்பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் அனுப்பும்.
இத்தகைய ட்ரோன்கள் தரையில் இருந்து இணைக்கப்பட்ட கேபிள் உதவியுடன் பறந்து சென்று கண்காணிப்பில் ஈடு படும். விண்ணில் சேகரிக்கும் தகவல் களை தரை கட்டுப்பாட்டில் உள்ள ராணுவத்தினருக்கு அனுப்பி வைக்கும். இதன் மூலம் அவசர காலங்களில், மிக வேகமாக தகவல்களை திரட்டவும், திடீர் தாக்குதல் நடத்தவும் முடியும். கண்ணுக்கு தெரியாத சீன எல்லைப் பகுதிகள், எளிதில் சென்றடைய முடியாத மலைப் பகுதிகளில் இந்த வகை ட்ரோன்கள் கூட்டம் சென்று கண்காணிக்கவும் தகவல் அனுப்பவும் முடியும். இந்த வகை ட்ரோன்கள் நீண்ட நேரமும் பறக்க கூடிய திறன் பெற்றவை.
எனவே, ஜெட்பேக்ஸ், விலங்கு ரோபோக்கள், ட்ரோன்களை கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ராணுவம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் முன்னெப்போதும் இல்லாத வகையில் ராணுவம் மேலும் பலமடையும் என்று உயரதிகாரிகள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT