Published : 01 May 2017 12:03 PM
Last Updated : 01 May 2017 12:03 PM

நீதிபதி கர்ணனுக்கு கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மனநிலை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீதிபதி சி.எஸ்.கர்ணன்



உச்ச நீதிமன்றம் உத்தரவு



‘‘நீதிபதி கர்ணனின் மனநலம் குறித்து, கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்த வேண்டும்’’ என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி சி.எஸ்.கர்ணன், நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்துக் கொண்டது. இந்த வழக்கில் நேரில் ஆஜராக உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை.

இதையடுத்து இந்திய நீதித்துறை வரலாற்றில் இல்லாத வகையில் முதல்முறையாக நீதிபதி கர்ணனை கைது செய்ய கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதி உச்ச நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் அவர் ஆஜரானார்.

அதன்பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 7 பேர் மீதும் எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், அவர்கள் தனது முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்றும் அடுத்தடுத்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற் பட்டது. இந்நிலையில், மே 1-ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு மீண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஆனால் நீதிபதி கர்ணன் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது:

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு, வரும் 4-ம் தேதி கொல்கத்தா அரசு மருத்துவ மனையில் மனநலம் குறித்த மருத்துவ சோதனை நடத்த வேண்டும். அதற்காக கொல்கத்தா அரசு மருத்துவமனையில் மருத் துவர்கள் குழு ஏற்படுத்தப்படும். மேலும், கர்ணனுக்கு சோதனை நடத்தும் போது, மருத்துவர் களுக்கு உதவி செய்ய, போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவை மேற்குவங்க டிஜிபி அமைக்க வேண்டும்.

மருத்துவ பரிசோதனை அறிக்கையை மருத்துவக் குழு வினர் வரும் 8-ம் தேதி உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின் மே 9-ம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிபதி கர்ணனுக்கு எதிராக, கடந்த பிப்ரவரி மாதம் 8-ம் தேதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. அந்தத் தேதிக்குப் பிறகு நீதிபதி கர்ணன் பிறப்பித்த எந்த தீர்ப்பையும் உத்தரவையும் நாட்டில் உள்ள அதிகாரிகள் யாரும் பின்பற்ற வேண்டாம்.

இதுகுறித்து நீதிபதி கர்ணன் தனது கருத்தை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். பதில் அளிக்காவிட்டால், இந்த விஷயத் தில் அவர் கருத்துத் தெரிவிக்க ஒன்றுமில்லை என்று இந்த நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும்.

இவ்வாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதி கர்ணன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து வருகிறது. நீதிபதி கர்ணன் வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு மனநல பரிசோதனை :நீதிபதி கர்ணன் பதில் உத்தரவு

நீதிபதி கர்ணன் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில் நேற்று புதிய உத்தரவை பிறப்பித்தார். அதில் கூறியிருப்பதாவது:

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சட்டவிதிகளுக்கு எதிரானது. அந்த உத்தரவை நான் ரத்து செய் கிறேன். என் முன்பு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட 7 நீதிபதிகளுக்கு நான் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதனை உச்ச நீதிமன்ற நீதிபதி கள் ரத்து செய்யவில்லை. அதன் மூலம் அவர்கள் குற்றவாளிகள் என்பது நிரூபணமாகிறது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் 6 உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு டெல்லி எய்ம்ஸில் மனநலப் பரிசோதனை நடத்தி, வரும் 7-ம் தேதிக்குள் என்னிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தப் பணியை டெல்லி போலீஸார் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x