Last Updated : 14 Jul, 2014 08:55 AM

 

Published : 14 Jul 2014 08:55 AM
Last Updated : 14 Jul 2014 08:55 AM

சிபிஐ அதிகாரி போல் நடித்தவர் கைது

டெல்லியின் பிரபல ஹோட்டல்கள் உள்ள பகுதி ஹோஸ்காஸ். இங்குள்ள ஒரு ஹோட்டலுக்கு சமீபத்தில் போலீஸ் உடையில் வந்த இளைஞர், அரசு அனுமதி உட்பட பல விஷயங்களை கேட்டு மிடுக்குடன் மிரட்டியுள்ளார்.

இதன் பிறகு சற்று தளர்ந்து நட்புடன் பேசிய வர், தோற்றத்தில் தன்னை போலவே இருக்கும் தனது சகோதரரை சமையல் பணியில் சேர்த்துக் கொள்ளும்படி வலியுறுத்தி உள்ளார். மறுநாள், அவரே இரட்டை சகோதரன்போல் நடித்து அந்தப் பணியிலும் சேர்ந்து கொண்டார்.

பின்னர், தன்னிடம் ஒரு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு டெல்லி வந்துவிட்ட காதலியை தேடும் பணியில் இறங்கினார். ஒரு தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணியாற்றும் அவரை சந்திக்கச் சென்றவர், நீண்ட நாட்களாக ரெஸ்டாரண்ட் பணிக்குச் செல்லவில்லை. இதனால் சந்தேகம் கொண்ட ரெஸ்டாரண்டின் உரிமையாளர், காவல் நிலையத்தில் புகார் செய்ய அந்த இளைஞர் செய்த மோசடி வெளியாகி உள்ளது.

இது பற்றி ஹோஸ்காஸ் பகுதி காவல்துறை குற்றப்பிரிவு இணை ஆணையர் ரண்வீந்திரா யாதவ் கூறியபோது, ‘சிபிஐயில் ஐஜியாகப் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரி அஜீத்குமார் என்ற பெயரில் அருகிலுள்ள தைபூர் நகரில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். கேரளாவை சேர்ந்த இவரது உண்மை பெயர் ஷாஜி குமார். டெல்லியின் ஐ.என்.ஏ மார்க்கெட் உட்பட மேலும் பிரபல ஹோட்டல்களில் அவர் மோசடி செய்துள்ளார். மலையாளப் படங்களைப் பார்த்து இவ்வாறு நூதன மோசடியில் ஈடுபட்டுள்ளார். தற்போது போலீஸ் பிடியில் சிக்கிவிட்டார்” என யாதவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x