Last Updated : 14 Jan, 2023 07:04 AM

 

Published : 14 Jan 2023 07:04 AM
Last Updated : 14 Jan 2023 07:04 AM

பல மாநிலங்களின் அரசியலில் தடம் பதித்த சரத் யாதவ் - பிஹாரின் ‘கிங்மேக்கர்’ ஆக இருந்த பொதுவுடைமைவாதி

புதுடெல்லி: ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவர் சரத் யாதவ், சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப் பட்டிருந்தார். மூச்சுத்திணறல் காரணமாக டெல்லிக்கு அருகே குருகிராமில் உள்ள போர்டீஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (வியாழன்) இரவு காலமானார். அவருக்கு வயது 75.

மத்திய பிரதேசத்தின் ஹோசிங்காபாத் மாவட்டம், பபாய் கிராமத்தில் 1947-ல் பிறந்தவர் சரத் யாதவ். 1971-ல் பொறியியல் கல்லூரி மாணவர் பேரவை தலைவரானார். அப்போது அரசியலில் நுழைந்த அவர், காங்கிரஸுக்கு எதிராக செயல்பட்டார். இதனால் மிசா சட்டத்திலும் கைதானார்.

தேசிய அரசியல்வாதிகளில்எவரும் இல்லாத வகையில் சரத் யாதவ் பல்வேறு மாநிலங்களின் எம்.பி.யாக இருந்துள்ளார். பிஹார் அரசியலில் நுழைந்து, 1991, 1996, 1999, 2009 என 4 முறை மதேபுரா எம்.பி.யாக சரத் யாதவ் இருந்தார்.

1988-ல் வி.பி.சிங் தலைமையில் ஜனதா தளம் கட்சியை தொடங் கினார் சரத் யாதவ். இதில், 1989-90 வரை குறுகிய காலப் பிரதமராக இருந்த வி.பி.சிங்கால் முதல்முறையாக மத்திய அமைச்சரானார்.

பிஹாரின் சமூகப் புரட்சி யாளர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் வழி காட்டுதலில் வந்தவர் சரத் யாதவ். இவர்களை போலவே பொதுவுடைமைவாதியாகி, பிஹார் அரசியலில் ‘கிங்மேக்கர்’ ஆக உருவெடுத்தார்.

பிஹார் முதல்வர் கற்பூரி தாக்கூரின் திடீர் மரணத்திற்கு பின் சரத் யாதவின் ஆதரவால் லாலு, ஜனதா தளம் சார்பில் எதிர்க்கட்சி தலைவரானார். அடுத்து வந்த சட்டப்பேரவை தேர்தலில் சரத்தின் தீவிரப் பிரச்சாரத்தால், லாலு முதல்வரானார். பிஹாரின் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாருக்கும், சரத் யாதவ் அரசியல் குருவாக இருந்தார். நிதிஷுடன் இணைந்து, ஐக்கிய ஜனதா தளம் கட்சியை தொடங்கிய அவர், தொடர்ந்து ஆதரவளித்து அவரை முதல்வராக்கினார். ஆனால் இந்த இரண்டு தலைவர்களிடம் இருந்தும் இடையில் பல ஆண்டுகள் சரத் யாதவ் பிரிய வேண்டியதாயிற்று.

2018-ல் லோக் தாந்திரிக் ஜனதா தளம் கட்சியை தொடங்கிய சரத் யாதவ், 2020-ல் அதை லாலு கட்சியுடன் இணைத்தார். பிறகு மெகா கூட்டணி காரணமாக நிதிஷுடனும் இணைந்தார்.

பாஜகவை எதிர்ப்பதில் அதிக தீவிரம் காட்டிய சரத் யாதவுக்கு மனைவி ரேகா யாதவ், மகள் சுபாசினி ராஜா ராவ், மகன் சாந்தனு புந்தேலா ஆகியோர் உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில் “பொது வாழ்க்கையில் நீண்ட வருடங்கள் இருந்த சரத் யாதவ்ஜியின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடன் அவ்வப்போது நடத்தியஉரையாடலை போற்றி மகிழ்கிறேன். அவரது மறைவால் வாடும்அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது அழ்ந்த அனுதாபங்கள். ஓம் சாந்தி” என்று குறிப்பிட்டுள்ளார். சரத் யாதவின் இறுதிச் சடங்கு மத்திய பிரதேசத்தில் உள்ள அவரது சொந்த ஊரில் இன்று நடைபெறுகிறது.

பிஹாரின் சமூகப் புரட்சியாளர்களான ஜெயப்பிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா ஆகியோரின் வழி காட்டுதலில் வந்தவர் சரத் யாதவ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x