Last Updated : 22 Dec, 2016 01:46 PM

 

Published : 22 Dec 2016 01:46 PM
Last Updated : 22 Dec 2016 01:46 PM

தந்தையை இழந்த இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்து வளர்ப்புத் தந்தையான குஜராத் தொழிலதிபர்

மகேஷ் சவானி என்ற தொழிலதிபர் கிறிஸ்துமஸ் தினந்தன்று தந்தையை இழந்த வறுமை நிலையில் உள்ள 236 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க உள்ளார்.

இந்த திருமண நிகழ்வு டிசம்பர் 22 (இன்று) முதல் டிசம்பர் 25 வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதில் 1000-க்கும் அதிகமான விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். மேலும் இந்த திருமண நிகழ்வில் மணப்பெண்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள், ஆடைகள் என இல்லறம் நடத்த அனைத்தும் வழங்கப்படுகிறது.

இது குறித்து தொழிலதிபர் மகேஷ் சவானி கூறும்போது, "கடந்த வருடம் இதே போன்று தந்தையை இழந்த 151 இளம்பெண்களுக்கு திருமணம் செய்து வைத்தேன்.

2008-ம் ஆண்டு முதல், தந்தையை இழந்து பிற ஆதரவுகளும் கிடைக்காமல் இருக்கும் பெண்களின் திருமணத்துக்கு உதவி புரிந்து வருகிறேன். இதனால் கிட்டதட்ட 800 பெண்கள் என்னை அப்பா என்று அழைக்கின்றனர். அவர்களுக்கு நான் வளர்ப்புத் தந்தையாகி உள்ளேன்.

சமூக சேவை செய்யும் குடும்பப் பின்னணியிலிருந்து நான் வந்ததால், வறுமை நிலையிலிருக்கும் பெண்களுக்கு உதவி செய்து வருகிறேன்.

கடந்த வருடம் நடத்தப்பட்ட திருமணத்துக்கு 5 கோடி வரை செலவு செய்தேன். இந்த வருடம் இந்தத் தொகை கணிசமாக அதிகரித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு எனது பணியாளர் ஒருவர் அவரது மகளின் திருமண நிகழ்வுக்கு முன்னதாக இறந்து விட்டார். அப்போதிலிருந்து தந்தைகளற்று வறுமையிலிருக்கும் பெண்களின் திருமணத்துக்கு உதவி செய்து வருகிறேன்.

உதவி புரிவதில் நான் இந்து, கிறிஸ்துவர், முஸ்லிம் என்ற மதம் வேறுபாடோ, உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்ற வேறுபாடோ பார்ப்பதில்லை. யார் என்னிடம் உதவி கோரினாலும் அவர்களை வரவேற்பேன். என்னிடம் உதவி கேட்டு வரும் இளம் பெண்களின் தந்தையின் இறப்பு சான்றிதழை மட்டுமே கேட்கிறேன்.

இந்த மிகப் பெரிய திருமண விழாவில் 50,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்கின்றனர்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுவரை குஜராத்தைச் சேர்ந்த, 800 இளம்பெண்களுக்கு திருமண உதவி புரிந்திருக்கிறார் மகேஷ் சவானி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x