Published : 12 Jan 2023 05:49 AM
Last Updated : 12 Jan 2023 05:49 AM
பெங்களூரு: ‘‘நான் ரூ.1 கோடி தருகிறேன். விபத்தில் உயிரிழந்த என்மகள், பேரனின் உயிரை திருப்பிதர முடியுமா?'' என உயிரிழந்த பெண்ணின் தந்தை கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூருவில் நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலின் 40 அடி உயர தூண் சரிந்து சாலையில் விழுந்ததில் தேஜஸ்வினி (28), அவரதுமகன் விஹன் (2) ஆகியோர் உயிரிழந்தனர்.
அரசு இழப்பீடு: காயமடைந்த தேஜஸ்வினியின் கணவர் லோஹித், மகள் வீனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கு பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இத்துடன் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் உயிரிழந்த தேஜஸ்வினியின் தந்தை மதன் கூறுகையில், ‘‘இந்த மோசமான விபத்தில் படுகாயமடைந்த எனது மருமகன் புதன்கிழமை காலையில் தான் கண் விழித்தார். அவரது மனைவி, மகள் இறந்ததை கேள்விப்பட்டு கதறி அழுதார். அவரது இழப்புக்கு இந்த அரசால் இழப்பீடு தர முடியுமா? எங்களுக்கு அவர்களின் இழப்பீடு தேவையில்லை. நான் அவர்களுக்கு ரூ.1 கோடி தருகிறேன். இறந்துபோன எனது மகள், பேரன் உயிரை முதல்வர் பசவரா ஜால் திருப்பித் தர முடியுமா?
கடுமையான நடவடிக்கை: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் மற்றும் ஒப்பந்ததாரர் நாகார்ஜுனா கட்டுமான நிறுவனம் அலட்சியத்தோடு செயல்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அலட்சியத்தோடு செயல்பட்டவர்களை கைது செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், இன்னும் நிறைய அப்பாவி மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும்” என எச்சரித்தார்.
கர்நாடக உள்துறை அமைச் சர் அரக ஞானேந்திரா கூறுகை யில், ‘‘கட்டுமான நிறுவன அதிகாரிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT