Published : 09 Jan 2023 08:24 AM
Last Updated : 09 Jan 2023 08:24 AM
திருவனந்தபுரம்: கேரள அரசின் ஆவணத் துறை சார்பில் ரூ.3 கோடி செலவில் திருவனந்தபுரத்தில் பனை ஓலை சுவடி அருங்காட்சியகம் தொடங்கப்பட்டு உள்ளது. இது உலகின் முதல் பனை ஓலைச் சுவடி அருங்காட்சியகம் ஆகும்.
நிலம்-மக்கள், போர்-அமைதி, கல்வி-சுகாதாரம், பொருளாதாரம், கலை-இலக்கியம், கேரளாவின் எழுத்து வரலாறு, நிர்வாகம் உட்பட 8 பிரிவுகளின் கீழ் பனை ஓலைச் சுவடிகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சுமார் 1.5 கோடிக்கும் மேற்பட்ட ஓலைச் சுவடிகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT